யாழ்-திருச்சிராப்பள்ளி IndiGo விமான சேவை

யாழ்-திருச்சிராப்பள்ளி IndiGo விமான சேவை

யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்துக்கும் இடையில் இந்தியாவின் IndiGo விமான நிறுவனம் சேவை வழங்குகிறது. உண்மையில் இந்த சேவை சென்னை விமான நிலையம் ஊடே செல்லும்.

பலாலிக்கும் திருச்சிராப்பள்ளிக்கு இடையிலான சேவைக்கு இருவழி கட்டணம் சுமார் $275 ஆக உள்ளது. இந்த கட்டணம் 7 kg carry-on பொதியயையும், 15 kg cabin பொதியயையும் உள்ளடக்குகிறது.

சென்னை இணைப்பு காரணமாக ஒவ்வொரு வழி பயணத்துக்கும் சுமார் 7.5 மணித்தியாலங்கள் தேவைப்படும். இது ஒரு நேரடி பயணம் ஆக இருக்குமானால், சுமார் 0.5 மணி நேரமே தேவைப்படும்.