ரம்பின் கனடிய வரியில் சிறிய தளர்வு, மேலும் ஒரு மாதத்துக்கு 

ரம்பின் கனடிய வரியில் சிறிய தளர்வு, மேலும் ஒரு மாதத்துக்கு 

ரம்ப் எதையும் சிந்தித்து கதைப்பவரோ, செய்வதை சிந்தித்து செய்பவரோ அல்ல. அவரின் மூடத்தனத்தால் அவர் செவ்வாய் நடைமுறை செய்த இறக்குமதி வரியில் மறுதினம் புதன்கிழமை மாற்றம் செய்துள்ளார்.

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ரம்ப் செவ்வாய் நடைமுறை செய்த இறக்குமதி 25% வரி புதன் மேலும் ஒரு மாத காலத்துக்கு ரம்ப் அரசால் இடைநிறுத்தப்படுள்ளது.

கனடாவில் கார் நிறுவனங்கள் இல்லை. அமெரிக்க கார் நிறுவனங்களான GM, Ford, Chrysler ஆகியனவே கனடாவில் சில கார் அல்லது கார் பாகங்கள் செய்யும் தொழிசாலைகளை கொண்டுள்ளன. சில பாகங்கள் வேறு கனடிய நிறுவனங்களிடம் இருந்தும் கொள்வனவு செய்யப்படுகிறது.

சுமார் 35 ஆண்டுகளாக கனடா-அமெரிக்கா-மெக்சிக்கோ இடையே நடைமுறையில் இருக்கும் NAFTA என்ற வர்த்தக உடன்படிக்கை காரணமாக ஒரு காரை இறுதியில் பொருத்த முன்னர் அதன் பாகங்கள் கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு பலதடவைகள் இந்த நாடுகளின் எல்லைகள் ஊடு சென்று இறுதியிலேயே கார் ஆக பொருத்தப்படும்.

இந்த பாகங்கள் ஒவ்வொரு தடவையும் எல்லைகளை தாண்ட 25% அறவிட்டால் காரின் விலை அர்த்தமற்றதாகும். பலரும் முன்னர் கூறிய இந்த உண்மையை ரம்ப் செய்வாய்க்கிழமையே உணர்ந்துள்ளார். அதனாலேயே இந்த திடீர் மாற்றம். இங்கே பாதிப்பு அடைந்தது GM, Ford, Chrysler ஆகிய அமெரிக்க கார் நிறுவனங்களே.

2024ம் ஆண்ட கனடாவில் இருந்து அமெரிக்காவின் இறக்குமதி:

Oil and gas25.7%$106.2B
Transportation equipment16.4%$67.6B
Primary metals for manufacturing7.8%$32.2B
Food7.3%$30.2B
Chemicals7.3%$30B
Machinery5.0%$20.6B
Petroleum and coal products3.8%$15.8B
Wood products2.7%$11.3B
Plastics and rubber products2.6%$10.8B
Paper2.3%$9.6B