செவ்வாய் வரி ஆரம்பம், புதன் ரம்ப்-ரூடோ பேச்சு ஆரம்பம்

செவ்வாய் வரி ஆரம்பம், புதன் ரம்ப்-ரூடோ பேச்சு ஆரம்பம்

சனாதிபதி ரம்ப் தேர்தல் காலத்தில் கூறியபடி ஆட்சிக்கு வந்த பின் கனடிய பொருட்கள் மீது 25% புதிய இறக்குமதி வரியை அறிவித்தார். கனடா அடிபணியாது பதிலுக்கு தானும் அமெரிக்க பொருட்கள் மீது புதிய இறக்குமதி வரியை அறிவித்தது.

கனடா அடிபணியாத நிலையில் ரம்ப் வரி நடைமுறை செய்தலை ஒரு மாதம் பின்போட்டார். அந்த ஒரு மாதம் நேற்று செவ்வாய்க்கிழமை முடிவடையவும் கனடா அடிபணியவில்லை. ரம்பின் வரி நடைமுறைக்கு வந்தது. கனடாவின் வரியும் நடைமுறைக்கு வந்தது.

ரம்ப் தற்போது வேறு வழியின்றி புதன்கிழமை கனடிய பிரதமர் ரூடோவுடன் பேச்சு நடத்த அறிவித்துள்ளார்.

ரூடோ அரசியலில் இருந்து ஒதுங்க உள்ளதால் அவர் எவருக்கும் பயப்பட தேவை இல்லாத நிலையில் உள்ளார். அது ரம்புக்கு பாதகமாக உள்ளது.

ரம்பின் வர்த்தக செயலாளர் (Commerce Secretary) Howard Lutnick ரம்ப் கனடாவுடனான முரண்பாட்டில் அரை வழியில் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.