இஸ்ரேல் மீண்டும் ஞாயிறு முதல் காசாவுக்கு உணவு, மருந்து போன்ற humanitarian பொருட்கள் எடுத்து செல்வதற்கு தடை விதித்துள்ளது. இஸ்ரேல் தான் ஏற்கனவே செய்து கொண்ட இணக்கத்துக்கு முரணாகவே மீண்டும் இந்த தடையை செய்கிறது.
ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வரைந்த யுத்தநிறுத்த இணக்கத்துக்கு அமைய சனிக்கிழமை வரை கைதிகளை கட்டம் கட்டமாக பரிமாறி வந்தன.
சனிக்கிழமை முதலாம் கட்டம் முழுமையாக முற்று பெற்றாலும், இஸ்ரேல் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல விரும்பவில்லை. இரண்டாம் கட்டம் நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்யும் என்பதால் இஸ்ரேல் அதை விருப்பவில்லை. இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்கி காசாவை முற்றாக அழிக்கும் நோக்கில் உள்ளது.
ஹமாஸ் கைகளில் இருக்கும் மிகுதி இஸ்ரேலிய கைதிகள் மட்டுமே இஸ்ரேலுக்கு நெருக்கடியாக உள்ளனர். அந்த மிகுதி இஸ்ரேல் கைதிகளை பெறும் நோக்கில் மட்டுமே இஸ்ரேல் முதல் கட்ட யுத்த நிறுத்த பேச்சை நீடிக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது. இரண்டாம் கட்ட யுத்த நிறுத்தத்துக்கு செல்ல இஸ்ரேல் விரும்பவில்லை.
முதல் கட்ட யுத்த நிறுத்த இணக்கத்தை நீடிக்க ஹமாஸ் இணங்க மறுத்ததாலேயே ஞாயிறு முதல் அத்தியாவசிய பொருட்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் இதுவரை இஸ்ரேலின் முரண்பாடுக்கு கருத்து எதையும் கூறவில்லை.