துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதில் வாழும் Kurds இன மக்களுக்கு ஒரு தனிநாடு அமைக்கும் நோக்கில் 1984ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடிய PKK என்ற ஆயுத குழு தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
ஆனாலும் Kurds மக்களுக்கு என்ன தீர்வு என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
1984ம் ஆண்டு முதல் துருக்கிக்கு எதிராக Abdullah Ocalan என்ற போராளி தலைமையில் போராடியது PKK. 1999ம் ஆண்டு துருக்கி Ocalan ஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றுவரை Ocalan சிறையிலேயே உள்ளார்.
அண்மையில் துருக்கி அரசியல்வாதியான Devlet Bahceli மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக சிறையில் உள்ள Ocalan தனது குழுவிடம் ஆயுத போராட்டத்தை கைவிட கேட்டிருந்தார். அதன்படியே ஆயுத போர் கைவிடப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சிரியாவில் உள்ள PKK குழுவின் சிரியாவின் பிரிவான SDF மீது துருக்கி பலத்த தாக்குதல்களை செய்து வந்தது. இது Kurds போராளிகளுக்கு பெரும் நெருக்கடியை வழங்கியது.
இந்த யுத்தத்துக்கு இதுவரை சுமார் 40,000 பேர் பலியாகி இருந்தனர்.
துருக்கியில் 20% மக்கள் Kurds இனத்தவர்.