மே மாதம் முதல் Skype சேவை நிறுத்தப்படும்?

மே மாதம் முதல் Skype சேவை நிறுத்தப்படும்?

இலவசமாக உலகம் எங்கும் தொலைபேசி மற்றும் வீடியோ தொலைபேசி சேவைகளை வழங்கி வந்த Skype தனது சேவையை மே மாதம் முதல் நிறுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி முறைப்படி Microsoft நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில செய்தி நிறுவனங்கள் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளன.

FaceTime, Zoom, WhatsApp, WeChat ஆகியவற்றுக்கு எல்லாம் முன்னர் உலக அளவில் இலவச தொலைபேசி சேவைக்கு வந்திருந்தது Skype. இந்த இணையம் மூலமான தொலைபேசி சேவையை Skype என்ற ஐரோப்பிய நிறுவனம் 2003ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தது.

இதன் மீதான மக்களின் ஆர்வம் காரணமாக அமெரிக்காவின் Microsoft நிறுவனம் 2011ம் ஆண்டு இதை $8.5 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது. ஆனால் Microsoft நிறுவனத்தின் கையில் Skype பாரிய வீழ்ச்சியை அடைந்தது. Skype ஐ வளர்க்கும் Microsoft நிறுவனத்தின் முயற்சி தோல்வி அடைந்தது.

2017ம் ஆண்டு Microsoft நிறுவனம் Teams என்ற நிறுவனங்களுக்கான தொடர்பாடல் சேவையை ஆரம்பித்தது. Teams சேவை Skype கட்டமைப்பை அடிப்படியாக கொண்டு தாயாரிக்கப்பட்டது. Skype தனிநபர்களுக்கு தொடர்ந்தும் சேவை வழங்கும் என்று கூறப்பட்டது.

2021ம் ஆண்டு Skype for Business சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் தனிநபர் Skype சேவை தொடர்ந்தது. அதுவே தற்போது நிறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Skype நிறுத்தப்படால், அதை பயன்படுத்துவோர் இலவச Teams சேவைக்கு நகர்த்தப்படலாம்.