காசாவை முற்றாக அழித்த இஸ்ரேல் இராணுவம் தற்போது West Bank பக்கம் திரும்பி உள்ளது. West Bank பகுதியில் உள்ள Jenin, Tulkarm, Nur Shams ஆகிய பலஸ்தீனர் முகாம்களில் இருந்த 40,000 அகதிகளை முற்றாக விரட்டி உள்ளது.
அகதிகளை விரட்டிய இஸ்ரேல் இராணுவம் தாம் அந்த இடங்களை ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த பகுதிகளில் அகதிகள் பயன்படுத்திய பல மாடி கட்டிடங்களை இஸ்ரேல் படைகள் உடைத்து தரைமட்டமாக்கியும் உள்ளன.
2002ம் ஆண்டுக்கு பின் தற்போது முதல் முறையாக மீண்டும் இஸ்ரேல் மீண்டும் தனது tank குகளை இந்த இடங்களுக்கு அனுப்பி உள்ளது.
1967ம் ஆண்டு 6 தினங்கள் இடம்பெற்ற யுத்தத்தில் (Six Day War) இஸ்ரேல் West Bank பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தது. இவ்வாறு ஆக்கிரமித்த இடங்களில் தற்போது 700,000 யூதர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த குடியிருப்புகள் உலக சட்டங்களுக்கு முரணானது.