அமெரிக்காவின் Delta Airlines விமான சேவைக்கு சொந்தமான சிறிய 85 ஆசனங்களை கொண்ட Mitsubishi CRJ-900LR வகை விமானம் ஒன்று கனடாவின் ரொறொன்றோ (Toronto Pearson) விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளாகியது.
திங்கள் மாலை 5:00 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்துக்கு 17 பேர் காயமடைந்து உள்ளனர். எவரும் பலியாகவில்லை. விமானம் ஓடுபாதையில் தலைகீழாக பிரண்டு உள்ளது.
அமெரிக்காவின் Minneapolis நகரில் இருந்து 80 பேருடன் (76 பயணிகளும், 4 பணியாளரும்) வந்த Delta Flight 4819 என்ற விமான சேவையே விபத்துக்கு உள்ளானது. Delta Airlines சார்பில் இந்த விமானத்தை இயக்கியது Endeavor Air என்ற சிறிய விமான சேவை நிறுவனமே.
விபத்தின் பின் ஓடுபாதைகள் மூடப்பட்டதால் ரொறொன்றோ வந்த பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டுள்ளன.
விபத்துக்கு முன் இப்பகுதியில் சுமார் 22 centimeter அளவு snow பெய்திருந்தது.