யூக்கிறேனில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டும் சவுதியில் கூடி பேசவுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு யூக்கிறேனும், ஐரோப்பாவும் புறக்கணிக்கப்படலாம் என்பதால் யூக்கிறேனும், ஐரோப்பாவும் வியப்படைந்துள்ளன.
பூட்டின் கேட்பதையெல்லாம் ரம்ப் வழங்கி ஒரு பக்க சார்பான யுத்த நிறுத்தத்தை ரம்ப் பெற்று யுத்தத்தை நிறுத்திய பெருமையை அடைய முனையக்கூடும் யூக்கிறேனும், ஐரோப்பிய நாடுகளும் அஞ்சுகின்றன.
யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி மீது ரம்புக்கு பலத்த காழ்ப்பு உண்டு. பைடென் ஆட்சிக்காலத்தில் பைடெனின் மகன் Hunter மீது வழக்கு ஒன்றை தொடர ரம்ப் கேட்டிருந்தார். அப்போது பைடென் சனாதிபதி ஆக இருந்ததால் செலன்ஸ்கி Hunter மீது விசாரணை செய்யவில்லை. அது செலன்ஸ்கி மீதான ரம்பின் காழ்ப்புக்கு காரணம் ஆகியது.
புறக்கணிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒரு அவசர மாநாடு ஒன்றுக்கு பிரான்சின் தலைநகர் பரிசில் கூடுகின்றனர்.
ரம்பால் புறக்கணிக்கப்படும் ஐரோப்பிய NATO நாடுகள் ஐரோப்பிய இராணுவம் ஒன்றை அமைக்கும் சந்தர்ப்பமும் உண்டு. அவ்வாறு நிகழ்ந்தால் அது NATO அணியின் முடிவாக அமையும்.