நியூசிலாந்தை மீறி Cook Island சீனாவுடன் பலமுனை இணக்கம் 

நியூசிலாந்தை மீறி Cook Island சீனாவுடன் பலமுனை இணக்கம் 

ஐரோப்பியர்களினதும் பின் அவர்கள் வழிவந்த நியூசிலாந்து, அஸ்ரேலியா ஆகிய நாடுகளினதும் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட காலம் இருந்த தென் பசுபிக் நாடான Cook Island சனிக்கிழமை சீனாவுடன் ஒரு பலமுனை comprehensive strategic partnership உடன்படிக்கை இணக்கத்தை செய்துகொண்டுள்ளது.

Cook Island பிரதமர் Mark Brown னும், சீன Premier Li Qiang உம் இந்த உடன்படிக்கையில் சீனாவின் Harbin நகரில் செய்துள்ளனர்.

இந்த உடன்படிக்கை சீன நிறுவனங்கள் Cook Island இல் பெருமளவு முதலீடு செய்ய வழி செய்கிறது. Cook Island நிலத்தில் பெருமளவு கனியங்கள் இல்லை என்றாலும் 15 தீவுகளை கொண்ட இந்த நாட்டுக்கு சுமார் 2 மில்லியன் சதுர கிலோமீட்டர் கனிய வளம் நிறைந்த கடலில் பொருளாதார உரிமை உள்ளது.

இந்த தீவின் பெரும்பாலானோர் நியூசிலாந்து குடியுரிமை கொண்டவர். தற்போது சுமார் 11,000 மக்களே இந்த தீவுகளில் வாழ்ந்தாலும் சுமார் 80,000 பேர் நியூசிலாந்திலும், சுமார் 28,000 பேர் அஸ்ரேலியாவிலும் வாழ்கின்றனர்.

இந்த நாட்டின் 78% மக்கள் Maori இனத்தவர் என்றாலும் இங்கே பிரதான மொழி ஆங்கிலமே. சுமார் 86% மக்கள் ஆங்கிலம் பேச, 78% மக்கள் Maori மொழியும் பேசுகின்றனர்.

இந்த நாட்டின் GDP யில் 67% உல்லாச பயணிகள் மூலமே கிடைக்கிறது. 2021ம் ஆண்டு 168,000 உல்லாச பயணிகள் இங்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நாட்டுக்கு தற்போது பாதுகாப்பு படைகள் இல்லை. போலீசார் மட்டுமே உள்ளனர். இதன் பாதுகாப்பை நியூசிலாந்தும், அஸ்ரேலியாவுமே கண்காணித்து வந்தன. சீனாவுடன் சனிக்கிழமை செய்யப்பட்ட இணக்கம் நியூசிலாந்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இணக்கத்தின் முழு விபரமும் தெரிந்த பின்னரே தாம் கருத்து கூறமுடியும் என்றுள்ளது நியூசிலாந்து.