ஐரோப்பாவின் எதிரி  ஐரோப்பாவுள் என்கிறார் JD Vance 

ஐரோப்பாவின் எதிரி  ஐரோப்பாவுள் என்கிறார் JD Vance 

ஐரோப்பாவின் எதிரி ரஷ்யாவோ, சீனாவோ அல்ல என்றும் ஐரோப்பாவின் எதிரி ஐரோப்பாவுள்ளேயே இருப்பதாகவும் அமெரிக்க உதவி சனாதிபதி JD Vance வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

Munich Security Conference என்ற பாதுகாப்பு அமர்வில் உரையாற்றிய வேளையிலேயே Vance மேற்படி கருத்தை தெரிவித்து உள்ளார்.

அத்துடன் ஐரோப்பாவில் பேச்சு சுதந்திரம் இல்லை என்றும், குடிவரவு கட்டுக்கடங்காது போயுள்ளது என்றும் Vance ஐரோப்பிய நாடுகளை சாடியுள்ளார்.

ஒரு காலத்தில் ரம்பை ஒரு ஹிட்லர் என்று விபரித்து Vance தற்போது ரம்பின் ஆதரவில் உதவி சனாதிபதியாகி உள்ளார். அதனால் தற்போது இவர் ரம்ப் போலவே பேச ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்காவை Greta Thunberg சாடுவதை அமெரிக்கா 10 ஆண்டுகள் பொறுத்திருக்க முடியும் என்றால் Elon Musk ஐரோப்பாவை சாடுவதை ஐரோப்பா சில மாதங்கள் பொறுக்கலாம் என்றும் கூறியுள்ளார் Vance.

ரம்ப்  ஆட்சியில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தும் உக்கிரம் அடையும். NATO அணியும் பெருமளவில் பலவீனம் அடையும்.