பொதுவாக அமெரிக்காவின் ஹொலிவூட் திரைப்படங்களே அதிக வருமானத்தை உழைக்கும் திரைப்படங்களாக இருக்கும். ஹொலிவூட் திரைப்படங்களின் தரமும், இவை பெருமளவு நாட்டவர் விளங்கக்கூடிய ஆங்கிலத்தை மொழியாகவும் கொண்டமையே பிரதான காரணங்கள்.
ஆனால் சீனாவில் சீன மொழியில் மிக தரமாக தயாரிக்கப்பட்ட Ne Zha 2 என்ற கார்ட்டூன் (animation) திரைப்படம் ஜனவரி 29 முதல் இரண்டு கிழமைகளில் $1.3 பில்லியன் ($1,300 மில்லியன்) வருமானத்தை பெற்றுள்ளது. இந்த வருமானம் ஹொலிவூட் திரைப்படங்களின் வருமானத்துக்கு நிகரானது.
அத்துடன் ஒரு சந்தையில் மட்டும் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் ஹொலிவூட் உட்பட உலக அளவில் அதிக வருமானம் பெற்ற திரைப்படமாகிறது சீன சந்தையில் மட்டுமே வெளியிடப்பட்ட Ne Zha 2.
இந்த திரைப்படத்தின் மொத்த செலவு $80 மில்லியன் மட்டுமே.
இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட Ne Zha என்ற திரைப்படத்தின் இரண்டாம் தொடர் ஆகும்.
இது விரைவில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஜப்பான், அஸ்ரேலியா ஆகிய இடங்களில் திரையிடப்படும்.