காசா பலஸ்தீனரை ஏற்க ஜோர்டான் அரசர் மறுப்பு 

காசா பலஸ்தீனரை ஏற்க ஜோர்டான் அரசர் மறுப்பு 

அமெரிக்க சனாதிபதி ரம்ப் காசாவில் வாழும் 2 மில்லியன் மக்களை காசாவில் இருந்து விரட்டி காசாவை கைப்பற்ற அறிவித்து உள்ளார். இந்த மக்களை ஜோர்டானும், எகிப்தும் ஏற்கவேண்டும் என்றும் ரம்ப் மிரட்டி வருகிறார்.

இது தொடர்பாக உரையாட ஜோர்டான் அரசர் King Abdullah II திங்கள் வெள்ளை மாளிகை சென்று ரம்புடன் உரையாடி உள்ளார். காசா மக்களை ஜோர்டான் ஏற்க முடியாது என்று ஜோர்டான் அரசர் திடமாக கூறினாலும், காசா பலஸ்தீனரை ஜோர்டான் ஏற்கவேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார் ரம்ப்.

பதிலுக்கு ஜோர்டான் 2,000 காயமடைந்த பலஸ்தீன சிறுவர்களை மட்டும் எடுக்க இணங்கியுள்ளது.

ஜோர்டான் அமெரிக்காவின் பொருளாதார உதவிகளில் தங்கி உள்ளதால் ரம்ப் அந்த உதவிகளை இடைநிறுத்தி ஜோர்டானுக்கு அழுத்தம் வழங்கலாம் என்றும் கருதப்படுகிறது.

2022ம் ஆண்டு அமெரிக்கா ஜோர்டானுக்கு அடுத்த 7 ஆண்டுகளில் $10.15 பில்லியன் உதவி வழங்க இணங்கி இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா $845 மில்லியன் உதவியை வழங்கி இருந்தது.

தற்போது ஜோர்டானில் உள்ள சுமார் 12 மில்லியன் மக்களில் அரை பங்கினர் நீண்ட கால யுத்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்த பலஸ்தீனரின் சந்ததியே. அண்மையில் சிரியாவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மேலும் 700,000 சிரியர்கள் ஜோர்டானில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

காசா பலஸ்தீனர் விரட்டப்படால், West Bank பலஸ்தீரருக்கும் அதுவே நடக்கும்.