உலக அளவில் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் 

உலக அளவில் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் 

2025ம் ஆண்டு உலக அளவில் இலங்கையின் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் உள்ளது என்கிறது அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Airlines Rating என்ற அமைப்பு.

கடந்த ஆண்டு முதலாவதாக இருந்த Qatar Airways இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட தென் கொரியாவின் Korean Air இந்த ஆண்டு முதலாம் இடத்தை கைப்பற்றி உள்ளது.

Korean Air முதலாம் இடத்தை அடைய அந்த விமானங்களில் சாதரண (economy) வகுப்பு ஆசங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளமை பயணிகளின் திருப்திக்கு பிரதான காரணமாக உள்ளது.

பொதுவாக ஏனைய விமான சேவைகள் தமது Boeing 777-300 விமானங்களில் 31 முதல் 32 அங்குல நீள legroom ஐ கொண்டிருக்க Korean Air தற்போதும் 33 முதல் 34 அங்குல நீள legroom ஐ கொண்டுள்ளன.

மூன்றாம் இடத்தில் Air New Zealand உள்ளது.

முதல் 25 விமான சேவைகள் வருமாறு:
1. Korean Air
2. Qatar
3. Air New Zealand
4. Cathay Pacific
5. Singapore Airlines
6. Emirates
7. Japan Airlines
8. Qantas
9. Etihad
10. Turkish Airlines
11. EVA Air
12. Fiji Airways
13. Virgin Atlantic
14. ANA
15. Aero Mexico
16. Air Caraibes
17. Thai Airways
18. Starlux
19. Vietnam Airlines
20. Sri Lankan Airlines
21. Air France
22. KLM
23. Air Calin
24. Air Mauritius
25. Garuda Indonesia