இஸ்ரேலுக்கு ரம்ப் $7 பில்லியன் ஆயுத விற்பனை 

இஸ்ரேலுக்கு ரம்ப் $7 பில்லியன் ஆயுத விற்பனை 

காசாவை தரை மட்டமாக்கிய இஸ்ரேலுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் மேலும் $7 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள வேளையில், வெள்ளிக்கிழமை இந்த விற்பனைக்கான அறிவிப்பு ரம்ப்  அரசால் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆயுதங்களில் small-diameter குண்டுகள், 500 இறாத்தல் குண்டுகள், Hellfire ஏவுகணைகள் ஆகியனவும் அடங்கும்.

ஏற்கனவே பைடென் தடுத்து வைத்திருந்த அமெரிக்காவின் 2,000 இறாத்தல் குண்டுகளும் இஸ்ரேலுக்கு மீண்டும் ரம்பால் விடுவிக்கப்பட்டுள்ளன.