ரஷ்யாவுடனான தமது மின் இணைப்புகளை (power grid) இன்று 7ம் திகதியுடன் எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய 3 Baltic நாடுகளும் துண்டிக்கின்றன. ஞாயிறு 9ம் திகதி முதல் இவை ஐரோப்பிய நாடுகளுடன் தமது மின்னை இணைத்துக்கொள்ளும்.
அதனால் இன்றுடன் BERELL (Belarus, Russia, Estonia, Latvia, Lithuania) இணக்கம் முறிகிறது.
சோவியத் காலத்தில் ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் ஆரம்பித்த இந்த மின் இணைப்புக்களே இறுதியாக அழிந்துபோகும் ரஷ்யாவுடனான மேற்படி நாடுகளின் தொடர்புகள். BERELL இணக்கப்படி இன்று வரை ரஷ்யாவே இந்த மின் இணைப்பை மேற்பார்வை செய்து வந்தது.
ரஷ்யாவின் மேற்கு பக்கம் முற்றாகவும், நிரந்தரமாகவும் மூடப்படுவதால் கிழக்கே சீனா மட்டுமே ரஷ்யாவின் வெளியுலக தொடர்பாக அமையும்.
மேற்படி 3 நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளின் grid உடன் இணைக்க ஐரோப்பிய நாடுகள் சுமார் $1.2 பில்லியன் முதலீடு செய்துள்ளன.