இந்திய அதானி (Adani) நிறுவனம் இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு (CEB) வழங்கும் 484 MW, 20 ஆண்டு திட்டம் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி உண்மையானது அல்ல என்றாலும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளது.
இந்த திட்டம் முன்னைய ரணில் அரசால் கேள்வி (public tender) எதுவும் இன்றி, அதானி கேட்ட விலைக்கே மின்னை கொள்வனவு செய்யப்படவிருந்தது. இந்த திட்டத்துக்கு எதிராக சில வழக்குகளும் உள்ளன. அத்துடன் தற்போதைய அரசு அதானி அறவிடும் விலையை குறைக்கவும் கேட்டுள்ளது.
முதல் இணைக்கப்படி இலங்கை மின்சார சபை kWh மின் அலகு ஒன்றை 8.26 அமெரிக்க சத்தங்களுக்கு ($0.0826) கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது. போட்டியின்றி முனைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த விலை சந்தை விலையிலும் மிக அதிகம். அதானி இந்தியாவில் மிக குறைந்த விலைக்கே மின்னை விற்பனை செய்கிறது. இந்த விலையையே தற்போதைய அனுர அரசு குறைக்க முனைகிறது.
இந்த திட்டத்தின் மீள் விசாரணை ஒன்று வரும் மார்ச் மாதமே ஆரம்பமாக உள்ளது.
Windforce என்ற நிறுவனம் மன்னாரில் 50 MW உற்பத்தியை அலகுக்கு 4.88 அமெரிக்க சத்தங்கள் மூலம் மின்னை வழங்க முன்வந்திருந்தது.
Vidullanka, Universal Energy, Square Mech ஆகிய நிறுவனங்கள் அலகு ஒன்றை 4.98 அமெரிக்க சத்தங்களுக்கு வழங்க முன்வந்தன.
Lahdhanavi என்ற நிறுவனம் அலகு ஒன்றுக்கு 5.90 அமெரிக்க சத்தங்களை மட்டுமே அறவிட இருந்தது.
ஆனாலும் ரணில் அரசு அதானியின் திட்டத்துக்கு உரிமையை வழங்கியது.