அமெரிக்காவில் மீண்டும் TikTok, ஆனால் எவ்வளவு காலத்துக்கு?

அமெரிக்காவில் மீண்டும் TikTok, ஆனால் எவ்வளவு காலத்துக்கு?

பைடென் அமெரிக்காவில் தடை செய்த சீனாவின் TikTok சேவையை இன்று முதல் சனாதிபதியாகும் ரம்ப் மீண்டும் Executive order மூலம் சேவைக்கு வர அனுமதி அளித்துள்ளார். சுமார் 14 மணித்தியாலங்கள் அமெரிக்காவில் தடைப்பட்ட TikTok மீண்டும் சேவைக்கு வந்திருந்தாலும் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறமுடியாது.

பைடேன் அடித்த பாம்பை ரம்ப் மீண்டும் தன் கையால் அடிக்க முனைவர். இவர் தனது முதலாம் ஆட்சியிலும் TikTok சேவையை அமெரிக்காவில் தடை செய்ய முனைந்தவர்.

ByteDance என்ற சீன நிறுவனத்துக்கு சொந்தமான TikTok சேவையை ரம்ப் தனது ஆதரவு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயற்பட வைக்க முனையலாம்.

பைடேன் அமெரிக்காவின் TikTok சேவையை 100% அமெரிக்கருக்கு விற்பனை செய்ய கூறினாலும், ரம்ப் 50% விற்பனைக்கு இணங்கலாம் என்று கூறப்படுகிறது.

சுமார் 170 மில்லியன் அமெரிக்கர் TikTok சேவையை பயன்படுத்துகின்றனர்.

Facebook/Meta, YouTube போன்ற அமெரிக்க நிறுவனங்கள் TikTok வடிவமைப்பை (algorithm) தம் கையால் வடிவமைக்க பல ஆண்டுகள் முனைந்திருந்தாலும் அவர்கள் அதில் வெற்றி கொள்ளவில்லை.