இலங்கை சனாதிபதி அனுரவின் சீன பயணத்தின்போது இலங்கையில் சீனா $3.7 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் இணக்கத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் சீனா இயக்கும் துறைமுகத்துக்கு அண்மையிலேயே இந்த புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமையும். இந்த ஆலை தினமும் 200,000 பரல் எணெய்யை சுத்திகரிக்கும்.
2019 ஆண்டு இந்த சுத்திகரிப்பு நிலைய திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், 2023ம் ஆண்டு அந்த உரிமை பறிக்கப்பட்டு இருந்தது. முறிந்துபோன இந்த Hambantota Oil Refinery திட்டத்துக்கு 50 ஆண்டு குத்தகை அடிப்படையில் 1,200 ஏக்கர் நிலம் வழங்கப்பட இருந்தது.
முறிந்துபோன பழைய திட்டம் சிங்கப்பூரை தளமாக கொண்ட Silver Park International என்ற நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனம் முன்னாள் தி.மு.க. அமைச்சர் S. Jagathrakshakan னின் Accord Group என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அனுர சீனாவில் செய்த இன்னோர் இணக்கப்படி சீனா $500 மில்லியன் (அரை billion டாலர்) நன்கொடையும் வழங்கவுள்ளது. இந்த பணம் இலங்கையில் விவசாயம் மற்றும் உல்லாச பயணம் ஆகிய துறைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
அநுர பயணம் செய்த இணக்கங்களின் மொத்த பெறுமதி சுமார் $10 பில்லியன் என்று கூறப்படுகிறது.