XiaoHongShu வில் தஞ்சம் அடையும் TikTok அகதிகள்

XiaoHongShu வில் தஞ்சம் அடையும் TikTok அகதிகள்

TikTok என்ற social media இணையத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக அமெரிக்க social media கள் மிரண்டு TikTok ஐ அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு மூலம் தடை செய்ய முனைகின்றன. அமெரிக்க பாவனையாளரின் தரவுகள் சீனாவின் கைக்கு கிடைக்கும் என்ற பயமே காரணம் என்று கூறினாலும், உண்மை அதுவல்ல.

அமெரிக்க அரசின் இச்செயலால் விசனம் கொண்ட அமெரிக்க TikTok பாவனையாளர் தற்போது XiaoHongShu (Little Red Book) என்ற இணையத்துக்கு தாவுகின்றனர். இதை அமெரிக்கர் RedNote என்றே அழைக்கின்றனர்.

கடந்த கிழமை மட்டும் அமெரிக்காவில் XiaoHongShu வை தமது smartphone களில் பதிவு செய்த அமெரிக்கர் தொகை 300% அதிகரித்துள்ளது. கடந்த 2 தினங்களில் மட்டும் 700,000 அமெரிக்கர் இதை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட XiaoHongShu சீன சந்தைக்கு, சீன மொழியை பிரதானமாக கொண்டு அமைக்கப்பட்டது. ஆனாலும் இடர்களை மீறி அமெரிக்கர் இதற்கு தாவுகின்றனர். இதற்கு இதன் தரமான வடிவமைப்பே பிரதான காரணம்.

TikTok சீனாவில் கிடைக்காது. அது வெளிநாட்டவருக்கு மட்டுமே கிடைக்கும். XiaoHongShu சீனருக்காக தயாரிக்கப்பட்டது.

TikTok அமெரிக்காவில் ஞாயிறு தடை செய்யப்படலாம்.  ஆனால் பைடென் நடைமுறை செய்த இந்த தடையை ரம்ப் மாற்றிஅமைக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

XiaoHongShu வும் விரைவில் அமெரிக்க தடைக்கு குறியாகலாம்.