ஞாயிறு முதல் காசாவில் யுத்த நிறுத்தம் 

ஞாயிறு முதல் காசாவில் யுத்த நிறுத்தம் 

ஞாயிறு 19ம் திகதி முதல் காசாவில் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு அடுத்த தினம், 20ம் திகதி, பைடென் வீடு செல்ல ரம்ப் சனாதிபதியாக பதவி ஏற்பார்.

பைடென் தரப்பும், ரம்ப் தரப்பும் யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட தனித்தனியே தாங்கள் மட்டுமே காரணம் என்று கதைவிட ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் ரம்ப் அணி இந்த யுத்த நிறுத்த பேச்சுக்களில் பங்கு கொண்டிருந்ததை பைடென் புதன்கிழமை ஏற்றுக்கொண்டிருந்தார்.

பைடெனின் கடைசி தினத்தில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தாலும், இதன் வெற்றி ரம்பின் கையாளலில் தங்கி உள்ளது.

இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை 1981ம் ஆண்டு Regan பதவி ஏற்க முன் ஈரானில் பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன் ஒப்பிடப்படுகிறது.

இந்த யுத்த நிறுத்தத்தின் முழு விபரங்களும் வெளியிடப்படவில்லை. பல தீர்மானங்கள் தீர்மானம் அற்று, அல்லது மறைக்கப்பட்டு உள்ளன.