Aung San Suu Kyi (அங் சன் சசூ கி) இன்று பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி Xi ஐ சந்தித்துள்ளார். Aung San Suu Kyi மயன்மாரின் (பர்மா) எதிர்கட்சியான National League for Democracy (NLD) என்ற கட்சியின் தலைவர் ஆவார். இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பொது தேர்தலில் NLD வெற்றி பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் Aung San Suu Kyi தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
.
1990 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் Aung San Suu Kyi யின் NLD கட்சி 59% வாக்குகளையும் 80% ஆசனங்களையும் பெற்றிருந்தது. ஆனால் இராணுவம் Aung San Suu Kyi ஐ வீட்டுக்காவலில் வைத்துவிட்டு இராணுவ ஆட்சியை நீடித்தது. மேற்கு உலகத்தால் புறக்கணிக்கப்பட்டு இருந்த பர்மாவின் இராணுவ அரசுக்கு உதவியாக இருந்து வந்திருந்தது சீனா.
.
.
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி Aung San Suu Kyi வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு இருந்தார்.
.
.
அதேவேளை பர்மா-சீனா எல்லை பகுதியான Kokang பகுதியில் வாழும் பர்மா நாட்டு சீனர்களுக்கும் பர்மா நாட்டு இராணுவத்துக்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்று இருந்தன. Kokang புரட்சியாளர்க்கு சீனா உதவி வந்துள்ளது. Aung San Suu Kyi யின் பெய்ஜிங் பயணத்தின் அன்று இந்த புரட்சியாளர்களும் தாமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள்.
.
.