வல்வெட்டித்துறை பட்ட போட்டி 2025

வல்வெட்டித்துறை பட்ட போட்டி 2025

அடாத மழையில் நனைந்து, கிழிந்தாலும் விடாது ஏறிய வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2025 பட்டங்கள் கீழே:

பட்ட போட்டி பட்டங்களின் தரம் உயர 3 வழிகள்:

1) வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் பங்கு கொள்ளும் பட்டங்களில்  ஏறக்குறைய அனைத்தும் ‘பெட்டி’ பட்டங்களே. பெட்டி பட்டங்களுக்கு மேலே பொம்மைகளை வைப்பது அல்லது பெட்டி பட்டத்தை சுற்றி உயிரின உடல் அமைப்பது பெரும் மகிமை ஆகாது. பெட்டி பட்டம் எவராலும் கட்டி ஏற்றப்படக்கூடியது. பெட்டி பட்டத்தின் aerodynamics மிக சாதாரணமானது. ஆனால் 60, 70 அல்லது அதிலும் கூடிய ஆண்டுகளாக வடக்கே பறக்கும் ‘கொக்கு’ மற்றும் ‘பருந்து’ போன்ற பட்டங்களின் aerodynamics மகிமை பெட்டி பட்டங்களிலும் உச்சமானது. அதனால் மொத்தம் 100 புள்ளிகளில் குறைந்தது 10 புள்ளிகள் aerodynamics மகிமைக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பெட்டி பட்டத்தை அடிப்படியாக கொண்ட பட்டங்களுக்கு அப்பால் நாம் செல்லலாம்.

2) பட்டங்களின் அசைவுக்கும் புள்ளிகள் வழங்கப்படல் வேண்டும். பெட்டி பட்டம் போல் அல்லாமல் பட்டங்களை ஆட, அசைய, நடனமாட வைக்க முடியும். பல நூல்களை கொண்டு ஒரு பட்டத்தை நடனமாட வைக்கலாம். அதனால் ஒரு பட்டம் ஏறிய பின் 5 அல்லது 10 நிமிடங்கள் ஆட வைத்து அதற்கும் ஒரு தொகை புள்ளிகள் வழங்கலாம்.

3) பட்டங்களின் அளவை கட்டுப்படுத்தலாம். ஒரு 10 அடி பெட்டி பட்டத்துக்கும் 100 அடி பெட்டி பட்டத்துக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் போட்டி விதிமுறைகள் பட்டங்களின் அதிகூடிய அளவை கட்டுப்படுத்தலாம் (உதாரணமாக ஆகக்கூடிய அளவு 15 அடிகள்). இந்த ஆண்டும், இதற்கு முன்னரும் மிகப்பெரிய பெரிய பட்டங்களுக்கு போதிய காற்று வீசவில்லை என்று குறைப்பட்டனர். நடுத்தர அளவிலான பட்டங்கள் இந்த இடரை தவிர்க்க உதவும்.