மீண்டும் காசாவில் யுத்த நிறுத்த நம்பிக்கை 

மீண்டும் காசாவில் யுத்த நிறுத்த நம்பிக்கை 

காசாவில் மீண்டும் யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த முயற்சிகள் கைகூடினால் முதல் கட்ட யுத்த நிறுத்தம் விரைவில் நடைமுறை செய்யப்படும். இக்காலத்தில் ஹமாஸ் 33 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும்.

முதல் கட்ட யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட்டால் அன்றைய தினத்தில் இருந்து 16ம் தினம் இரண்டாம்  கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகும். ஆனால் இந்த இரண்டாம் கட்ட பேச்சு காலத்தில் ஆட்சியில் இருக்கவுள்ள ரம்ப் என்ன செய்வார் என்பது எவருக்கும் தெரியாது.

சில விசயங்கள் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளன. உதாரணமாக யுத்தத்துக்கு முன் காசா எல்லையில், கசாவின் பக்கத்தில், சுமார் 300 மீட்டர் அகல பாதுகாப்பு வலயமே இருந்தது. ஆனால் இஸ்ரேல் அதை தற்போது 2 km அகல பாதுகாப்பு வலயமாக்க முனைகிறது. ஏற்கனவே சிறிய காசாவின் நிலத்தை இச்செயல் மேலும் சிறிதாக்கும்.

2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி 251 இஸ்ரேலியர் ஹமாசால் கடத்தப்பட்டு இருந்தனர். அதில் 109 பேர் முனைய பேச்சுக்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், 8 பேர் படைகளால் மீட்கப்பட்டனர், 37 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 3 பேர் தப்பியபோது இஸ்ரேல் படைகளால் தவறுதலாக சுட்டு கொலை செய்யப்பட்டனர். இவற்றின் மொத்தம் 157.

தற்போது 94 பேர் ஹமாஸ் வசம் உள்ளனர். அதில் 60 உயிருடனும், 34 பேர் மரணித்தும் உள்ளனர்.