சீனாவில் 300 பில்லியன் kWh நீர் மின் அணை, இந்தியா கவலை

சீனாவில் 300 பில்லியன் kWh நீர் மின் அணை, இந்தியா கவலை

சீனா திபெத்தில் ஓடும் Yarlung Zangbo என்ற ஆற்றை மறித்து, அணைக்கட்டு அமைத்து, உலகத்திலேயே மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தை கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் இந்தியாவை விசனம் கொள்ள வைத்துள்ளது. 

இந்த அணைக்கட்டு நிரம்பி, மிஞ்சிய நீரே இந்தியாவுக்கு வரும். அது இந்திய விவசாயத்துக்கு பாதகமாக அமையும். அத்துடன் பிரம்மபுத்திரா ஆற்றின் தரமும் நலிவடையும். இயற்கையாக ஓடும் ஆறு அடியே உள்ள கனியங்கள் முதல் நீரில் வாழும் உயிரினங்கள் வரை கீழ் நோக்கி செல்ல உதவும். ஆனால் அணைக்கட்டுக்கு மேலால் மேவி பாயும் தூய நீர் இவற்றை கொண்டிராது.

Yarlung Zangbo ஆறு அருணாசல பிரதேசத்தில் இந்தியாவுக்குள் நுழைகிறது. இந்தியா ஊடு பாயும் இந்த ஆறு பிரம்மபுத்திரா ஆறு என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது பங்களாதேசம் ஊடு பாய்ந்து கடலுக்கு செல்கிறது.

தற்போது உலகத்தில் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி சீனாவின் Three Gorges Dam என்ற அணைக்கட்டில் உள்ளது. Three Gorges நீர் மின் ஆலை 88.2 பில்லியன் kWh (kilo Watt hour) மின்னை உற்பத்தி செய்கிறது. Yarlung Zangbo ஆலை 300 kWh மின்னை உற்பத்தி செய்யும்.

Yarlung Zangbo ஆறு ஒரு பகுதில் சுமார் 50 km கிடையாக ஓடும் வேளையில், சுமார் 2 km (6,561 அடி) வீழ்ச்சி அடைகிறது. அந்த இடம் நீர் மின் அணைக்கு மிகவும் சாதகமானது.

Yangtze ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டு 2012ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த Three Gorges அணைக்கட்டுக்கு சுமார் $34.83 பில்லியன் செலவானது. அத்துடன் நீருள் அமிழவுள்ள இடங்களில் இருந்து 1.4 மில்லியன் மக்கள் உயர்ந்த இடங்களுக்கு நகர்த்தப்பட்டனர்.