சீனாவின் பழம்பெரு நகரான நான்ஜிங் (NanJing) இலிருந்து Yangtze ஆறுவழியே சீனாவின் உட்பகுதில் உள்ள மற்றுமோர் பழம்பெரும் நகரான சொங்சிங் (ChongQing) நோக்கி உல்லாசப்பயணிகளை ஏற்றிவந்த உல்லாச கப்பல் ஒன்று 458 நபர்களுடன் மூழ்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அரச தவுகளின்படி இதில் 405 உல்லாச பயணிகள், 5 உல்லாச பயண நடாத்துனர், மற்றும் 48 பணியார்ளர் இருந்துள்ளனர். கப்பல் ஹுபேய் (Hubei) மாகாண பகுதில் பயணிகையிலேயே இடம்பெற்றுள்ளது.
.
.
.
Yangtze ஆற்றுவழி பயணம் சீனாவின் புகழ்மிக்க உல்லாச பயண செயல்பாடுகளில் ஒன்று. வழக்கமாக இதில் அதிகம் வெளிநாட்டு பயணிகளும் அடங்கும்.
.
.
சீன பிரதமர் Li Keqiang உதவி பிரதமருடன் சம்பவ இடத்துக்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்றுள்ளதாக சீன அரசு கூறுகிறது.
.
.
இதுவரை 9 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கப்பல் மூழ்கிய இடத்தில் நீரின் ஆழம் சுமார் 15 மீட்டர் எனப்படுகிறது.
.