கனடிய நிதியமைச்சர் விலகினார், கட்சிக்குள் குழப்பம் 

கனடிய நிதியமைச்சர் விலகினார், கட்சிக்குள் குழப்பம் 

கனடாவின் நிதி அமைச்சர் Chrystia Freeland உள்ளூர் நேரப்படி இன்று திங்கள் காலை தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கனடிய பிரதமர் ரூடோவுக்கு Freeland அனுப்பிய கடிதத்தை அவர் X பதிவிலும் வெளியிட்டு உள்ளார்.

அந்த உத்தியோக பூர்வ கடிதத்தில் பிரதமர் ரூடோ கடந்த வெள்ளி தன்னை நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக கேட்டதாகவும், பதிலுக்கு வேறு ஒரு அமைச்சர் பதவி தருவதாகவும் கூறியதாக Freeland கூறியுள்ளார்.

ஆனால் தனக்கு எந்த அமைச்சு பதவியும் வேண்டாம் என்று Freeland பிரதமர் டூடோவுக்கு தெரிவித்து உள்ளார். தான் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க உள்ளதாகவும் Freeland கூறியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை ரூடோ அரசு தனது economic statement அறிவிப்பை செய்யவுள்ள நேரத்தில் நிதி அமைச்சரின் பதவி விலகல் நகைப்புக்குரியது.

ரூடோ பெரும் செலவில் அரசியல் gimmicks செய்வதாக Freeland குற்றம் சாட்டியுள்ளார் (“costly political gimmicks”). ஆனால் அந்த gimmicks எவை என்று Freeland கூறவில்லை.

அமெரிக்காவில் ரம்ப் சனாதிபதி ஆகவுள்ளதும், அவரின் 25% வரி வெருட்டலும் Liberal கட்சிக்குள் குழப்பம் விளைய பிரதான காரணமாகி உள்ளது.