ஆபிரிக்கா கண்டத்துக்கும், மடகாஸ்காருக்கும் (Madagascar) இடையில் உள்ள பிரெஞ்சு பகுதியான Mayotte தீவில் சனிக்கிழமை இரவு தாக்கிய Chido என்ற பெயர் கொண்ட சூறாவளிக்கு குறைந்தது பல நூறு மக்கள் பலியாக இருக்கலாம் என்றும், பலியானோர் தொகை 1,000 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் இதுவரை 11 உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன, உதவிகளும் செல்கின்றன. ஏற்கனவே தரமற்ற கட்டுமானங்களை கொண்ட இந்த இடம் தற்போது உதவிகள் செல்ல வசதி இன்றி உள்ளது. இங்கு குடிநீர் தட்டுப்பாடாகவும், மின்சாரம் இன்றியும் உள்ளது.
சுமார் 320,000 மக்களை கொண்ட இந்த தீவில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்.
இந்த சூறாவளியால் இங்கு சில இடங்களில் 226 km/h வேகத்தில் காற்று வீசியுள்ளது. அவ்வகை காற்று பெரும் அழிவை ஏற்படுத்த வல்லது.
சுமார் 90 ஆண்டுகளுக்கு பின் இந்த தீவை தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இதுவாகும்.