ரம்ப் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவற்கு உலகின் முதல் செல்வந்தரான இலான் மஸ்க் (Elon Musk) $260 மில்லியன் (1/4 பில்லியன் டாலர்) நன்கொடையாக வழங்கி உள்ளதாக தேர்தல் திணைக்கள பதிவுகள் கூறுகின்றன. தனிநபர் ஒருவர் தேர்தலுக்கு வழங்கிய அதிகூடிய தொகை இதுவே.
ரம்பின் ஆதரவை அதிகரிக்க மஸ்க் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்த America PAC என்ற பிரச்சார அமைப்புக்கு மட்டும் $238 மில்லியன் வழங்கி உள்ளார். அத்துடன் அக்டோபர் மாதம் ஆரம்பித்த RBG PAC என்ற அமைப்புக்கு $20.5 மில்லியன் வழங்கி உள்ளார்.
R. F. Kennedy Jr. ஆரம்பித்த Make America Healthy Again என்ற அமைப்புக்கு மஸ்க் $3 மில்லியன் வழங்கி உள்ளார். வெறும் பல நன்கொடைகளை மஸ்க் செய்துள்ளார்.
இலான் மஸ்க் அடுத்த ஆண்டு முதல் அமைய உள்ள ரம்பின் ஆட்சியில் பெரும் பதவியை கொள்ளவுள்ளார். அத்துடன் இவரின் Tesla போன்ற முதிலீடுகளும் அதிக பலனை அடையவுள்ளன.
மஸ்க் மட்டுமன்றி வேறு பல நன்கொடையாளரும் ரம்பின் ஆட்சியில் உயர் பதவிகளை அடைய உள்ளனர். ரம்பின் தேர்தல் பணிகளுக்கு சுமார் $9 மில்லியன் வழங்கிய Howard Lutnick ரம்பின் ஆட்சியில் Commerce Department தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் $20 மில்லியன் நன்கொடை வழங்கிய Linda McMahon ரம்பின் ஆட்சியில் Education Secretary ஆக்கவுள்ளார்.