2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த நாணயத்தின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமன்றி இலங்கை ரூபாய்க்கு எதிராகவும் இந்திய ரூபாய் பெறுமதி இழந்து வருகிறது.
2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் 1 இந்திய ரூபாய்க்கு சுமார் 2 இலங்கை ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் 2022ம் ஆண்டு மே மாதத்தில் 1 இந்திய ரூபாய்க்கு 4.7 இலங்கை ரூபாய்கள் கிடைத்தன. அப்போது கடன் தொல்லை காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை அடைந்திருந்தது.
ஆனால் தற்போது 1 இந்திய ரூபாய்க்கு சுமார் 3.4 இலங்கை ரூபாய்கள் மட்டுமே கிடைக்கும். தற்போது இந்தியாவில் இலங்கைக்கு இருந்தது போல் கடன் தொல்லை இல்லை.
2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் 1 அமெரிக்க டாலருக்கு சுமார் 60 இந்திய ரூபாய்கள் கிடைத்தது. ஆனால் தற்போது 85 ரூபாய்கள் வரை கிடைக்கிறது.
ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி குறைவது ஏற்றுமதிக்கு சாதகம் என்றாலும், இறக்குமதிக்கு அது பாதகமானது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை அது அதிகாரிக்கு.