நேற்று திங்கள் அமெரிக்காவின் பைடென் அரசு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பங்களுக்கு மேலதிக தடை விதித்த பின் செவ்வாய்க்கிழமை சீனா தனது நாட்டில் இருந்து கல்லியம் (Ga), ஜேர்மானியம் (Ge), antimony (Sb) ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது.
கல்லியம், ஜேர்மானியம் போன்ற கனியங்களின் பொதுமக்கள் பாவனை மிக குறைவு என்றாலும் தொழில்நுட்ப தயாரிப்பில், இராணுவ பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு பிரதானம். EV எனப்படும் மின்னில் இயங்கும் கார் தயாரிப்புக்கு இவை பிரதானம்.
உலக அளவில் சீனாவே 94% கல்லியம் தயாரிப்பையும், 83% ஜேர்மானியம் தயாரிப்பையும் செய்கிறது என்று கூறுகிறது ஐரோப்பிய ஒன்றிய ஆய்வு ஒன்று. இவற்றை தயாரிக்க செலவு மிகவும் அதிகம் என்பதால் மேற்கு நாடுகள் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை..
ரம்ப் ஆட்சிக்கு வருமுன்னாரே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றி வருகிறது. இதன் முடிவு என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.