மேற்கு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுள் மூக்கை நுழைக்கும் காலம் கடந்து தற்போது இந்தியா போன்ற நாடுகளின் அரசியல் கனடா போன்ற மேற்கு நாடுகளுள் வேர் விடும் காலம் தோன்றியுள்ளது. இதற்கு கனடா போன்ற நாடுகளின் தற்கால குள்ள நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளே காரணம்.
உதாரணமாக கனடாவின் Conservative கட்சியின் தலைவராக Patrick Brown என்பவர் 2022ம் ஆண்டு உள்கட்சி தேர்தலில் வெல்வதை இந்தியா தடுத்துள்ளது என்று செய்திகள் வெளிவருகின்றன.
Patrick Brown தற்போது இந்தியாவில் பிரிவினை தேடும் கனடிய சீக்கியர்களின் பலத்த ஆதரவை கொண்டவர். 2022ம் ஆண்டு Patrick Brown கட்சி தலைமை பதவியில் தோற்ற பின் சீக்கியர் பெருமளவில் வாழும் Toronto வின் புறநகரான Brampton நகரில் சீக்கியர் ஆதரவுடன் நகர தலைவர் (mayor) ஆகியுள்ளார். தற்போதும் அவர் அந்த பதவியை கொண்டுள்ளார்.
Radio-Canada வெளியிட்ட செய்தியின்படி இந்திய தூதரக அதிகாரிகள் Patrick Brown தனது கட்சி தலைமைக்கு போட்டியிட்ட காலத்தில் அவரின் குழுவில் national co-chair பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் Michelle Rempel Garner என்பவரிடம் சென்று Patrick Brown க்கான ஆதரவை கைவிட அழுத்தி உள்ளார்.
சில தினங்களின் பின், உட்கட்சி தேர்தல் உக்கிரமாக இருக்கும் வேளையில், Michelle Rempel Garner 2022ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி திடீரென Patrick Brown குழுவின் co-chair பதவியை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தான் Alberta மாநிலத்தில் தலைமை பதவிக்கு போட்டியிட உள்ளதாக காரணம் காட்டியிருந்தார். ஆனால் அவர் Alberta மாநிலத்தில் பின்னர் போட்டியிடவில்லை.
அந்த உட்கட்சி போட்டியில் Pierre Poilievre என்பவர் வெற்றி 68% ஆதரவுடன் வெற்றி அடைந்திருந்தார். இவரே தற்போதும் கனடிய எதிர்க்கட்சி தலைவர் ஆகவுள்ளார்.
இந்திய அரசு கனடிய-இந்திய இந்துக்கள் Patrick Brown க்கு ஆதரவு தெரிவித்து அங்கத்துவம் பெறுவதையும் தடுத்து வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கனடாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் Panorama India என்ற நிகழ்வுக்கு 2022ம் ஆண்டு Patrick Brown செல்வத்தையும் இந்தியா தடுத்து உள்ளது. இந்த நிகழ்ச்சியை செய்தோர் “You are no longer welcome because of your ties with the Sikh community” என்று Brown க்கு கூறினாராம். 2022ம் ஆண்டுக்கு முன் Brown இந்த நிகழ்வில் பங்கு கொண்டிருந்தார்.
இவ்வகை நாடகத்திலேயே இலங்கை தமிழ் அரசியலும் கனடாவுள் மாண்டுள்ளது. ஆனால் புஞ்சாப் மாநிலமோ, இலங்கையின் வடக்கு/கிழக்கோ கனடாவால் எந்த பயனையும் அடையப்போவதில்லை.