மகனுக்கு அப்பா சனாதிபதி பைடென் பொது மன்னிப்பு

மகனுக்கு அப்பா சனாதிபதி பைடென் பொது மன்னிப்பு

அமெரிக்க சனாதிபதி பைடென் தனது மகன் Hunter க்கு இன்று ஞாயிறு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். பைடென் வழங்கும் இந்த பொது மன்னிப்பை ஜனவரி முதல் சனாதிபதி ஆகவுள்ள ரம்ப் மாற்றி அமைக்க முடியாது.

பைடென் தனது அறிக்கை ஒன்றில் “Today, I signed a pardon for my son Hunter” என்றும் இது ஒரு “full and unconditional pardon” என்றும் கூறியுள்ளார்.

கடந்த அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன்னும், தேர்தலுக்கு பின் இன்று வரையும் பைடென் தான் மகனுக்கு பொது மன்னிப்பு வழங்ககேன் என்று பல தடவைகள் கூறியிருந்தார். ஆனால் தனது கூற்றை அவர் இன்று மாற்றியுள்ளார்.

மகன் Hunter மீது சட்டவிரோத துப்பாக்கி கொள்வனவு தொடர்பான வழக்கு ஒன்றுக்கு டிசம்பர் 12ம் திகதியும், $1,4 மில்லியன் வரி (tax) செலுத்தாமை வழக்கு ஒன்றுக்கு டிசம்பர் 16ம் திகதியும் நீதிமன்றம் தண்டனை வழங்க இருந்தது. தற்போது இந்த இரண்டு வழக்குகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி குற்றத்துக்கு அதிகூடிய சிறை 25 ஆண்டுகள், வரி குற்றத்துக்கு அதிகூடிய சிறை 17 ஆண்டு சிறை.