அஸ்ரேலியா இன்று வியாழன் முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் Facebook, TikTok, Instagram, X, Snapchat போன்ற social media களில் இணைவதை தடை செய்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த தடை படிப்படியாக நடைமுறை செய்யப்படும். ஒரு ஆண்டின் பின் தடை முற்றாக சட்டமாகும்.
பாடசாலைகளில் பரவலாக பயன்படுத்தப்படுவதால் YouTube மேற்படி தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டின் பின் இந்த தடையை மீறும் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் A$ 49.5 மில்லியன் (U$ 32 million) வரை தண்டம் விதிக்கலாம்.
மேற்படி social media கள் உண்மையில் சிறுவர்களின் உளவியல் பாதிப்புகளுக்கு காரணமாகின்றன என்று அஸ்ரேலியா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
சுமார் 77% அஸ்ரேலிய மக்கள் இந்த சட்டத்தை ஆதரித்து உள்ளனர். அத்துடன் Rupert Murdoch என்பவரின் மிகப்பெரிய News Corp செய்தி நிறுவனமும் இந்த சட்டத்துக்கு ஆதரவளித்து உள்ளது.
ஆனால் பெரும் வருமானம் பெறும் social media நிறுவனங்கள் குமுறி உள்ளன.
ரம்ப் அணியில் பலம் கொண்டுள்ள X உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) ஆட்சிக்கு வரவுள்ள ரம்ப் மூலம் அஸ்ரேலியாவை தண்டிக்க முனையக்கூடும்.
சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோர் தினமும் 40 நிமிடங்கள் மட்டுமே Douyin என்ற சீன social media வை பயன்படுத்தலாம். வேறு பல நாடுகள் இவ்வகை தடைக்கு முனைந்து வருகின்றன.