ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் கனடா, மெக்சிக்கோ ஆகிய இரண்டு நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக ரம்ப் இன்று திங்கள் கூறியுள்ளார். அது தற்போது நடைமுறையில் உள்ள NAFTA உடன்படிக்கைக்கு முரணானது.
அத்துடன் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிட உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
ரம்ப் இவ்வாறு முன்னரும் பல மிரட்டல்களை அறிவித்து தனக்கு சாதகமான பொருளாதார பேச்சுகளுக்கு தளம் அமைத்திருந்தார். இவர் தனது 2017 ஆட்சியில் NAFTA என்ற அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய 3 நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையை கைவிட அறிவித்து இருந்தார். ஆனால் அது கைவிடப்படவில்லை.
அமெரிக்காவுக்கு கனடா ஏற்றுமதி செய்யும் முதலாவது பெரிய பொருள் எரிபொருள். அதற்கு ரம்ப் 25% மேலதிக வரி அறவிட்டால் அது அமெரிக்காவில் எரிபொருள் விலையை மிகையாக அதிகரிக்க, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குன்றும்.