அதானி மீது அமெரிக்கா இலஞ்ச வழக்கு தாக்குதல் 

அதானி மீது அமெரிக்கா இலஞ்ச வழக்கு தாக்குதல் 

இந்திய பிரதமர் மோதியின் உற்ற நண்பரான தொழிலதிபர் அதானி மீதும் அவரின் உறவினரான Sagar Adani மீதும், Vneet Jaain என்பவர் மீதும் அமெரிக்கா (US Department of Justice, US Securities and Exchange Commission) நியூ யார்க் நகரில் ஊழல் வழக்கு ஒன்றை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. வழக்கை கையாளும் அமெரிக்க நீதிபதி அதானியின் கைதுக்கு உத்தரவு இட்டுள்ளார்.

புதன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையான காலத்தில் அதானி $250 மில்லினுக்கும் அதிகமான பணத்தை இந்திய அரசில்வாதிகளுக்கு இலஞ்சமாக வழங்கி solar மின் சக்தி வழங்கும் உரிமைகளை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

அவ்வாறு இலஞ்சம் வழங்குவதன் மூலம் பெற்ற வணிபங்கள் மூலம் அதானி $2 பில்லியன் ($2,000 மில்லியன்) இலாபம் அடைவார் என்றும் மேற்படி வழக்கின் குற்ற பத்திரிகை கூறுகிறது.

மேற்படி வணிபங்களை ஆதாரமாக கொண்டு அதானி நிறுவனம் $3 பில்லியன் கடன்களையும், bond மூலமான கடன்களையும் பெற்றுள்ளது என்றும் குற்ற பத்திரிகை கூறுகிறது. அவ்வாறு கடன் வழங்கியோரில் அமெரிக்க முதலீட்டாளரும் அடங்குவர்.

மேற்படி மூவருக்கும் அப்பால் மேலும் 5 பேர் மீதும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 கனடிய முதலீட்டு நிறுவனத்தினரும் அடங்குவர். மொத்தம் 8 பேரில் 7 பேர் இந்தியர். ஒருவர், Cyril Cabanes, மட்டும் பிரெஞ்சு-அஸ்ரேலியன் குடியுரிமை கொண்டவர்.

இந்த செய்தியின் பின் அதானியின் பங்குசந்தை பெறுமதி $28 பில்லியன் வெகுமதியை இழந்துள்ளது. Adani Green Energy யின் பங்கு சந்தை பெறுமதி 17% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானியும் விற்பனை செய்யவிருந்த $600 மில்லியன் bond கடன் நடவடிக்கைகளை நிறுத்தி உள்ளது.

சுமார் $70 பில்லியன் வெகுமதியை கொண்ட அதானி உலகத்தில் 22 ஆவது பெரிய செல்வந்தர்.

இலங்கையிலும் அதானி மேசைக்கு கீழால் solar மற்றும் கொழும்பு துறைமுக உரிமைகளை பெற்றது தெரிந்ததே.