ஆட்கடத்தல் குற்றச்சாட்டு காரணமாக போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதிமன்றம் தேசிங்கராசன் ராசையாவின் (Thesingarasan Rasiah) கடவுச்சீட்டை பறிக்க, கனடிய அரசு புதியதோர் கடவுச்சீட்டை ராசையாவுக்கு வழங்கியுள்ளது.
ராசையாவுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்ட போது அவர் கனடிய போலீசாரால் electronic ankle bracelet பொருத்தப்பட்டு Cornwall (Ontario) பகுதியில் வீட்டு காவலில் இருந்துள்ளார்.
இந்த குழப்பம் கனடாவில் போலீஸ், நீதிமன்ற குற்றச்செயல் பட்டியலுக்கும் (database) கடவுச்சீட்டு திணைக்களத்துக்கு இடையில் தரமான தேடல் வசதி இல்லை என்பதை காட்டியுள்ளது.
2021ம் ஆண்டு இரண்டு இலங்கை அகதிகளை அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு கடத்த உதவியதை ஏற்றுக்கொண்ட ராசையா 15 மாத சிறை தண்டனை பெற்றிருந்தார்.
2023ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தப்படும் 9 அகதிகள் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கு இடையே பாயும் St. Lawrence ஆற்றில் பலியாகி இருந்தனர். இது தொடர்பாக ராசையா மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அவ்வேளை கைப்பற்றப்பட்ட புதிய கடவுச்சீட்டும் தற்போது போலீசாரின் கைகளில் உள்ளது.
2008ம் ஆண்டும் ராசையா இரண்டு கனடிய கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றத்துக்காக 52 தினங்கள் சிறை சென்றவர்.
ஒரு தமிழர் தன்னை கடத்த ராசையா C$7,000 பெற்றதாக கூறியுள்ளார்.