காசாவில் இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்த பேச்சுக்களை முன் நின்று செய்து வந்த கட்டார் (Qatar) அந்த பணியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது.
யுத்தம் செய்யும் இஸ்ரேலும், ஹமாசும் யுத்த நிறுத்தம் தொடர்பாக முழு மனதுடன் செயற்படவில்லை என்பதாலேயே தாம் யுத்த நிறுத்த பேச்சு பணிகளில் இருந்து விலகுவதாக கட்டார் கூறியுள்ளது.
கடந்த நவம்பர் கட்டார் முன் நின்று செய்த பேச்சுக்கள் காரணமாக ஹமாஸ் 105 யூத கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 240 பலஸ்தீன கைதிகளை விடுவித்து இருந்தது.
அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ள இஸ்ரேலின் பிரதமர் நெட்டன்யாஹு தற்போது ஹமாஸை மட்டுமன்றி பலஸ்தீனத்தையே முற்றாக அழிக்கும் நோக்கில் உள்ளார். பேச்சுக்கள் மூலம் எதையும் பலஸ்தீனருக்கு இழக்க நெதன்யாஹூ விரும்பவில்லை.
அதேவேளை ஹமாஸ் குழுவை கட்டாரில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா கட்டார் அரசை அழுத்தி வருகிறது. கட்டார் ஹமாஸை வெளியேற்றுவது தொடர்பாக அறிவிப்பு எதையும் இதுவரை செய்யவில்லை.