எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாறிய இந்திய, சீன படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாறிய இந்திய, சீன படைகள்

நேற்றைய தீபாவளி தினத்தன்று இந்திய, சீன படைகள் தீபாவளி இனிப்புகளை எல்லையில் பரிமாறியுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தணிவதை இது எடுத்துக்காட்டுகிறது.

இந்த இனிப்பு பரிமாற்றம் Ladakh பகுதியிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் உள்ள Line of Actual Control வழியே 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்த பரிமாற்றம் இரண்டு அரசுகளினதும் அங்கிகாரம் பெற்ற நிகழ்வாக கருதப்படுகிறது.

BRICS அமர்வுக்கு ரஷ்யா சென்ற இந்திய பிரதமர் மோதியும், சீன சனாதிபதி சீயும் அக்டோபர் 23ம் திகதி நேரடியாக பேசி இருந்தனர்.

2020ம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற ஆயுதங்கள் இன்றிய வன்முறைக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகி இருந்தனர். அதன் பின் இரண்டு இராணுவங்களுக்கும் இடையில் குறைந்தது 20 சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றன.

இரு தரப்பும் சர்சைக்குரிய எல்லை பகுதிகளுக்கு தமது படைகளை அனுப்புவது இல்லை என்று இணங்கியுள்ளன.