பலஸ்தீன ஐ.நா. உதவி அமைப்பு UNRWA மீது இஸ்ரேல் தடை 

பலஸ்தீன ஐ.நா. உதவி அமைப்பு UNRWA மீது இஸ்ரேல் தடை 

பலஸ்தீன அகதிகளுக்கு உதவி செய்வதற்கு 1967ம் ஆண்டு ஐ.நா. உடன்படிக்கை ஒன்று மூலம் உருவாக்கப்பட்ட UN Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 2 சட்டங்கள் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சட்டங்களில் ஒன்று UNRWA இஸ்ரேலில் இயங்குவதை தடை செய்கிறது. பாராளுமன்றத்தில் இது 92 ஆதரவு வாக்குகளையும், 10 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்று சட்டமாகியது. மற்றையது இஸ்ரேல் அதிகாரிகள் UNRWA வுடன் தொடர்பு கொள்வதை தடை செய்கிறது. இது 87 ஆதரவு வாக்குகளையும், 9 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்றுள்ளது.

1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின் 1950ம் ஆண்டு முதல் UNRWA பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வருகிறது. அப்போது இஸ்ரேல் படைகளால் விரட்டப்பட்ட 750,000 அகதிகளுக்கு UNRWA உதவி செய்ய ஆரம்பித்தது. 

தற்போது மத்திய கிழக்கில் 5.9 மில்லியன் பலஸ்தீன அகதிகளுக்கு UNRWA உணவு, மருத்துவ, படிப்பு, வேலைவாய்ப்பு வசதிகளை செய்கிறது. இதில் ஜோர்டான், லெபனான், சிரியா ஆகிய நாடுகளிலும் ஆக்கிரமித்து உள்ள காசா, West Bank பகுதிகளில் வாழும் அகதிகளும் அடங்கும். காசாவில் மட்டும் 1.7 மில்லியன் அகதிகள் உதவி பெறுகின்றனர்.

UNRWA 30,000 அகதிகளுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. அதில் 13,000 பேர் காசாவில் உள்ளனர். இதுவரை 233 UNRWA ஊழியர்கள் இஸ்ரேல் படைகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

1948ம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமே அகதிகள், அவர்களின் சந்ததிகள் அகதிகள் அல்ல என்கிறது இஸ்ரேல்.

வழமைபோல் கனடா, அஸ்ரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா ஆகிய 6 நாடுகளும் கூட்டாக இஸ்ரேல் UNRWA அமைப்பை தடை செய்யக்கூடாது என்று வாக்கெடுப்புக்கு முன் ஊளையிட்டு இருந்தன. UNRWA வுக்கு பெரிய அளவு உதவி வழங்கும் அமெரிக்காவும் உதவியை முற்றாக நிறுத்திய பின் UNRWA வை தடை செய்யக்கூடாது என்று ஊளையிட்டு இருந்தது.

ஐ.நா.வின் செயலாளர் ஏற்கனவே இஸ்ரேல் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.