இந்தியாவின் Shreya Life Sciences என்ற மருந்து ஆய்வு நிறுவனம் ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் Dell நிறுவனம் தயாரித்த PowerEdge XE9680 வகை server களை விற்பனை செய்துள்ளது என்று Bloomberg செய்தி நிறுவனம், ImportGenius, NBD ஆகியன கூட்டாக அறிந்துள்ளன.
Shreya மொத்தம் 1,111 இவ்வகை Dell sever களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த sever களில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு தடை செய்யப்பட்ட NVIDIA H100 chip உள்ளன.
இவை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் செய்யப்பட்டுள்ளன.
இந்த விற்பனையின் பெறுமதி சுமார் $300 மில்லியன் என்றும் கூறப்பட்டுள்ளது.