இலங்கையில் உள்ள யூத உல்லாச பயணிகள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் “Level 4” எச்சரிக்கையை விடுத்துள்ளன.
குறிப்பாக அறுகம் குடா மற்றும் அகங்கம, காலி, ஹிக்கடுவ, வெலிகம ஆகிய இடங்களில் உள்ள யூதர்களை உடனடியாக இந்த பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேற கேட்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இலங்கையை விட்டு வெளியேறுமாறும், அல்லது கொழும்புக்கு நகருமாறும் இவர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
யூத பயணிகளை ஹீபுறு (Hebrew) எழுத்துக்கள் கொண்ட ஆடைகள் போன்ற யூத அடையாளங்களை கொண்டிருக்க வேண்டாம் என்றும் கேட்கப்படுள்ளது.