இந்தியாவில் செய்மதி மூலமான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் உரிமையை பெற இந்தியாவின் முகேஷ் அம்பானியும், அமெரிக்காவின் இலான் மஸ்க்கும் (Elon Musk) கடுமையாக போட்டியிடுகின்றனர்.
அம்பானி இந்திய அரசு செய்மதி தொடர்புக்கு பயன்படும் அதிர்வெண் பகுதியை (frequency spectrum) ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்கிறார். அம்முறையில் அம்பானி உரிமையை பெற்றால் இந்திய செய்மதி தொலைத்தொடர்பு சந்தையை அவர் முற்றாக கட்டுப்படுத்தலாம்.
ஆனால் மஸ்க் இந்திய அரசு அதிர்வெண் உரிமையை தன்னகத்தே கொண்டு, அவற்றை பயன்படுத்தும் உரிமையை மட்டும் போட்டியிடும் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்கிறார்.
மஸ்க்கின் Starlink நிறுவனம் ஏற்கனவே சுமார் 6,500 low-earth orbit (LEO) செய்மதிகளை ஏவி 100 நாடுகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்குகிறது.
ஆனால் அம்பானியிடம் செய்மதி வசதிகள் இல்லை. அதனால் அம்பானி SES Astra என்ற லக்ஸம்பேர்க் medium-earth orbit (MEO) செய்மதி நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யவுள்ளது.
LEO:
1) 160 km முதல் 2,000 km உயரத்தில் பூமியை வலம் வரும்
2) உலகம் முழுவதும் சேவை வழங்க பல்லாயிரம் செய்மதிகள் தேவை
3) மிக சிறியவை, ஏவல் செலவு குறைவு, பராமரிப்பு செலவு அதிகம்
4) ஒரு நாளில் பூமியை பல தடவைகள் சுற்றும்
5) Globestar செய்மதிகள் 1,414 km உயரத்தில் உள்ளன
MEO:
1) 2,000 km முதல் 35,786 km உயரத்தில் பூமியை வலம் வரும்
2) உலகம் முழுவதும் சேவை வழங்க சில நூறு செய்மதிகள் போதும்
3) பெரியவை, ஏவல் செலவு அதிகம், பராமரிப்பு செலவு மிக குறைவு
4) ஒரு நாளில் சில தடவைகள் பூமியை சுற்றும்
5) GPS சேவை வழங்கும் செய்மதிகள் 22,000 km உயரத்தில் உள்ளன
GEO (Geostationary Equatorial Orbit):
1) 35,786 km க்கும் அப்பால் பூமியை வலம் வரும்
2) இரண்டு அல்லது மூன்று செய்மதிகள் போதும்
3) மிகப்பெரியவை, ஏவல் செலவு மிக அதிகம்
4) பூமியின் வேகத்தில் சுற்றும், பூமி சார்பில் நிலையானது
5) மத்திய கோட்டு நாடுகளுக்கு மட்டும் உகந்தது