இன்று திங்கள் அஸ்ரேலிய பாராளுமன்றம் சென்ற பிரித்தானிய அரசர் சார்ல்ஸுக்கு (King Charles III) அஸ்ரேலிய பூர்வீக குடியினரான செனட்டர் Lidia Thorpe கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் வந்த அரசரிடம் “This is not your land”, “You are not my king”, “You committed genocide against our people”, “Give us what you stole from us” என்று சத்தமிட்டுள்ளார் Lidia Thorpe.
சத்தமிட்ட இவரை பாதுகாப்பு அதிகாரிகள் சபைக்கு வெளியே அழைத்து சென்றனர்.
கனடிய மற்றும் நியூசிலாந்து ஆதி மக்களுடன் பிரித்தானியா “treaty” களை கொண்டுள்ளது. அவை ஆதி மக்களின் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அஸ்ரேலியாவில் அவ்வகை treaty இல்லை.
2022ம் ஆண்டு Lidia தனது சத்தியப்பிரமாணம் ஒன்றில் இராணியை “the colonizing Her Majesty Elizabeth II” என்று அழைக்க முயன்றவர்.