அமெரிக்க சனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கு சுமார் 2 கிழமைகள் உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், ரம்ப் ஆகிய இருவரில் எவரும் வெற்றிக்கு போதுமான ஆதரவை கொண்டிருக்கவில்லை. இருவரும் தற்போது Michigan மாநிலத்தில் இறுதிநேர பரப்புரை செய்கின்றனர்.
அமெரிக்காவில் மற்றைய நாடுகளைப்போல் அதிக வாக்குகளை பெற்றவர் சனாதிபதி ஆவதில்லை. பதிலுக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட electoral வாக்குகளை அதிகம் பெறுபவர் (270 அல்லது அதற்கும் மேற்பட்ட electoral வாக்குகள்) சனாதிபதி ஆக தெரிவு செய்யப்படுவார்.
அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருந்தாலும், நடைமுறையில் சனாதிபதி தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிப்பது swing states என்று அழைக்கப்படும் 7 மாநிலங்களே.
இஸ்லாமியர் அதிகம் வாழும் Michigan மாநிலம் 15 electoral வாக்குகள் கொண்ட ஒரு swing state. இங்கு 2016ம் ஆண்டு 11,000 மேலதிக வாக்குகள் பெற்ற ரம்ப் சனாதிபதி ஆனார். பின் 2020ம் ஆண்டு 155,000 மேலதிக வாக்குகள் பெற்ற பைடென் சனாதிபதி ஆனார்.
Michigan மாநிலம் பெருமளவு இஸ்லாமியர் வாழ்கின்ற மாநிலம். இங்குள்ள Dearborn நகரில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கினர். காசா யுத்தத்தில் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரித்த பைடென், ஹாரிஸ் இருவரையும் இங்குள்ள பெருமளவு இஸ்லாமியர் வெறுக்கின்றனர்.
இந்த இஸ்லாமியர் இம்முறை Jill Stein என்ற Green Party வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். Stein ஒரு யூத பெண் என்றாலும், இவர் பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்ப்பவர்.
பைடெனை போட்டியில் இருந்து விரட்டிய காசா யுத்தம் ஹாரிஸ் தோல்விக்கும் காரணம் ஆகலாம்.