அமெரிக்காவின் Intel நிறுவனம் தயாரிக்கும் கணினி chip களுக்கு சீன அரசு விரைவில் பலத்த கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று நம்பப்படுகிறது. Cybersecurity Association of China (CSAC) என்ற சீன ஆய்வு அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றே இதற்கு காரணம்.
Xeon processors உட்பட Intel தயாரிப்புகள் கொண்டுள்ள (embedded) operating systems அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான National Security Agency (NSA) இரகசிய பின் கதவுகளை கொண்டிருக்க வசதி செய்கிறது என்றும், அது சீனாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் கூறுகிறது CSAC.
சீனா கடந்த ஆண்டு அமெரிக்காவின் Micron Technology என்ற memory chip தயாரிக்கும் நிறுவனத்துக்கு பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
Intel நிறுவனத்தின் வருமானத்தின் 25% க்கும் அதிகமான வருமானம் சீனாவில் இருந்தே கிடைக்கிறது.