மேலும் 230 சீன இணைய திருடர்கள் இலங்கையில் கைது 

மேலும் 230 சீன இணைய திருடர்கள் இலங்கையில் கைது 

மேலும் 230 சீன இணைய திருடர்களை இன்று (அக்டோபர் 15) கைது செய்துள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார். இவர்கள் உலகம் எங்கும் உள்ள வங்கிகளில் இருந்து இணையம் மூலம் திருடுபவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த கைதுக்கு உதவ சீனாவில் இருந்து காவல் அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர். இந்த சீனரை சீனாவுக்கு நாடு கடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அக்டோபர் 12ம் திகதி கண்டி நகருக்கு அண்மையில் உள்ள குண்டசாலை பகுதியில் 120 சீன இணைய திருடர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் 47 அறைகளை கொண்ட மாளிகை ஒன்றில் இயங்கி உள்ளனர்.

இவ்வகை குற்றங்களுக்கு சீனாவில் தண்டனை கடுமை என்பதால் இந்த குழுக்கள் இலங்கை, கம்போடியா போன்ற நாடுகளை பயன்படுத்துகின்றனர். இலங்கையில் தரமான இணைய சேவை உள்ளது இன்னோர் காரணம்.

இதுவரை 250 கணனிகள், 500 கைத்தொலைபேசிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

கடந்த ஜூன் மாதம் 200 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.