Concern Worldwide என்ற ஐரோப்பாவின் NGO தயாரித்த 2024ம் ஆண்டுக்கான உலக பசி கொடுமை சுட்டியில் (Global Hunger Index) இலங்கை 56ம் இடத்தில் உள்ளது. நேபால் 68ம் இடத்திலும், பங்களாதேஷ் 84ம் இடத்திலும், இந்தியா 105ம் இடத்திலும், பாகிஸ்தான் 109ம் இடத்திலும் உள்ளன.
இலங்கை, நேபால், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பசி கொடுமை நிலைமை “Moderate” என்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலைமை “Serious” என்றும் கூறப்படுகிறது.
சீனா உட்பட 22 நடுகள் 1ம் இடத்தில் உள்ளன. இவை உட்பட முதல் 51 நாடுகளில் பசி கொடுமை “Low” என்று கூறப்படுகிறது.
Chad (125), யேமென் (126), சோமாலியா (127), ஆகிய சில நாடுகளில் பசி கொடுமை நிலைமை “Alarming” என்று கூறப்படுகிறது.
இந்த கணிப்புக்கு 127 நாடுகள் உள்ளடக்கப்பட்டன. செல்வந்த நாடுகளும், கியூபா போன்ற சில நாடுகளும் கணிப்புக்கு எடுக்கப்படவில்லை.