இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்களிடம் மொத்தம் $1.115 டிரில்லியன் ($1,115 பில்லியன்) சொத்துக்கள் உள்ளதாக அமெரிக்காவின் Forbes நிறுவனம் கணித்துள்ளது. இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை திடம் அற்ற பங்குச்சந்தை மூலமான சொத்துக்களே.
கடந்த ஆண்டு இந்த 100 பேரிடமும் இருந்த சொத்துக்கள் $800 பில்லியன் மட்டுமே. அதாவது இவர்களின் சொத்துக்கள் கடந்த 12 மாதங்களில் மட்டும் 40% ஆல் அதிகரித்துஉள்ளன.
இந்தியாவின் முதலாவது செல்வந்தரான முகேஷ் அம்பானியிடம் தற்போது $119.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. இவரின் சொத்துக்கள் கடந்த 12 மாதங்களில் $27.5 பில்லியனால் அல்லது 30% ஆல் அதிகரித்து உள்ளன.
இரண்டாம் இடத்தில் உள்ள, பிரதமர் மோதிக்கு நெருங்கியவர்களான அதானி குடுத்பத்திடம் $116 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. இவர்களின் சொத்துக்கள் கடந்த 12 மாதங்களில் $48 பில்லியனால் அல்லது 70% ஆல் அதிகரித்து உள்ளன.
மூன்றாம் இடத்தில் இருப்பது சாவித்திரி ஜிண்டால். இவர் உட்பட மேற்படி 100 பேரில் 9 பேர் பெண்கள்.