கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த தாக்குதலுக்கு 1,200 பேர் பலியாகியும், 250 பேர் பணயம் எடுக்கப்பட்டும் இருந்தனர்.
ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு பழிவாங்க இஸ்ரேல் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 42,000 பலஸ்தீனரை கொலை செய்துள்ளது. அதில் அரை பங்குக்கும் மேலானவர்கள் பெண்களும், சிறுவர்களும்.
பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் இந்த யுத்தத்துக்கு அமெரிக்கா இதுவரை $17.9 பில்லியன் ஆயுத உதவி செய்ததாக Brown University கூறுகிறது. அத்துடன் அமெரிக்கா தனது படைகளை கொண்டு செய்யும் தாக்குதல்களுக்கு மேலும் $4.86 பில்லியன் செலவளித்துள்ளது.
காசாவில் 66% கட்டிடங்கள் இஸ்ரேலின் குண்டுகளால் அழிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது ஐ.நா. அதில் 227,000 குடியிருப்பு வீடுகளும் அடங்கும்.
காசாவில் 80% வைத்திய நிலையங்களும் இஸ்ரேலால் அழிக்கப்பட்டுள்ளன. மின்சார வசதிகள் முற்றாக தடைபட்டுள்ளன.
காசாவின் 90% மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்து உள்ளனர். அங்கு 70% நீர் வழங்கல் கட்டுமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
யுத்தத்துக்கு முன் அங்கு 50% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 80% ஆக உயர்ந்துள்ளது.
ஐ. நா. கணிப்பின்படி காசாவில் 40 மில்லியன் தொன் கட்டிட இடிபாடுகள் உள்ளன. இவற்றை அகற்ற சுமார் 15 ஆண்டுகள் தேவை என்கிறது ஐ.நா.
காசாவில் அழிக்கப்பட்ட கட்டிடங்களை மீண்டும் கட்ட சுமார் 40 ஆண்டுகள் தேவை என்கிறது The Shelter Cluster அமைப்பு.